வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (11:14 IST)

இத்தனை அற்புத பலன்களை தருகிறதா ஆப்பிள்...!!

ஆப்பிளின் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பு நிறமாகவும், ஒரு சில இரகங்களில் இளம்பச்சை, மஞ்சள் மற்றும் ஊதா நிறங்களிலும் இருக்கும்.

ஆப்பிளானது குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
 
ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. குடல் பாதையில் உள்ள தேவையற்ற நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட்டால் வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கிறது.
 
ஆப்பிளில் உள்ள ஃபைபர் ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருக்க உதவும். ரத்த நாளங்களை தளர்த்துவதற்கு ஆப்பிள் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 
 
ஆப்பிள் பழத்தில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
 
ஆப்பிள் பழமானது குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பலவித ஆபத்தான புற்று நோய்கள் நம்மை அண்ட விடாமல் தடுக்கிறது.
 
தினமும் இரண்டு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் நெருங்க விடாமல் தடுக்கும்.