ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா...?

எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். ஆனாலும் எதுவானாலும் எல்லாமே அளவு இருக்க  வேண்டும்.

பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதனால் பித்த நீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும். எனவே பித்தப்பை கல் பிரச்சனை  உள்ளவர்கள் இஞ்சி டீயை தவிர்க்கவும்.
 
கற்பிணிப் பெண்களுக்கு ஒமட்டல், வாந்தி ஏற்படும் அந்த சமயங்களில் இஞ்சி டீ குடிக்க விரும்புவர். அவ்வாறு குடிப்பதனால் அது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கற்பிணி பெண்கள் இஞ்சி டீ குடிப்பதை தவிர்க்கவும்.
 
அளவிற்கு அதிகமாக இஞ்சி டீயை குடிப்பதனால் இரப்பைப் பிரச்சனை ஏற்படும். எனவே அளவாக குடிப்பது நல்லது. இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக  குடிப்பதனால் நமது உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.
 
சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் ஏற்படுத்துகிறது.
 
உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை  ஏற்படுத்துகிறது.
 
இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள்  உள்ளன.