வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெள்ளை அரிசியை காட்டிலும் அதிக பலன்களை கொண்ட கைக்குத்தல் அரிசி !!

கைக்குத்தல் அரிசி ஊட்டச்சத்து நிறைந்த முக்கிய உணவாகும். இதில் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் வெள்ளை அரிசியைக் காட்டிலும் கைக்குத்தல் அரிசியானது அதிக பலன்களை கொண்டது.

கைக்குத்தல் அரிசியானது நார்ச்சத்தை தக்கவைப்பதால் நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்க உதவும் உணவு  வகைகளில் இது ஒரு முக்கிய உணவாகும்.
 
கைக்குத்தல் அரிசியில் நமது உடலுக்கு தேவையான இயற்கை எண்ணெய்களை அதிக அளவில் உள்ளது. நமது உடல் சுகாதாரத்திற்கு தேவையான அதிக பலன்களை கொண்டுள்ளது.
 
கைக்குத்தல் அரிசியில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட்கள் நோய்களை வராமல் தடுத்து மூப்படைதலையும் மெதுவாக்குகின்றது.
 
பதப்படுத்தப்பட்ட அரிசி மற்றும் தானியங்கள் தரும் கார்போஹைட்ரேட்டுகளை காட்டிலும் கைக்குத்தல் அரிசியில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
 
கைக்குத்தல் அரிசியில் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் நமது நரம்புகளையும் சதைகளையும் சீராக்குவதற்கும் கால்சியம் தன்மையை சமன் செய்வதற்கும்  உதவுகின்றது. மெக்னீஷியம் மற்றும் கால்சியம் நமது எலும்புகளுக்கு இன்றியமையாதது. நமது உடலில் மூன்றில் இரண்டு பங்கு மெக்னீஷியம் எலும்புகளில்  உள்ளது.
 
கைக்குத்தல் அரிசியில் இயற்கை சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த முதல் உணவாக இருக்கின்றது.