புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள் !!

ஆயில் ஸ்கின் என்றால் முகத்தில் எண்ணெய் வழிகிற தோற்றத்துடன் இருக்கும்.இந்த வகை சருமம் கொண்டவர்களுக்கு சருமத்தில் சுருக்கம் எளிதில் விழாது.

எண்ணெய் பசை சருமம் கொண்டிருப்பவர்களுக்கு முகப்பரு பிரச்சனை அதிகரிக்கும். நீங்கள் எடுத்துகொள்ளும் உணவு உங்கள் எண்ணெய்பசையை அதிகரிக்க செய்யலாம். இதற்கு பேஸ் பேக் மற்றும் உணவு பழக்கமும் மிக அவசியம். வெள்ளரிகளில் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உள்ளது. இது சருமத்துக்கு  அவசியம் தேவையானது.
 
சுடு தண்ணீர் அல்லது குளிர்ந்த நீர் இவை இரண்டுமே ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு பொருந்தாத ஒன்று. மிதமான சூடுள்ள நீரில் குளித்தால் மட்டுமே முகத்தில்  சேர்ந்துள்ள அழுக்குகள் அனைத்து வெளியேறும். ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் கிடைக்க எளிதான வழிகளில் இதுவும் ஒன்று.
 
ஓட்ஸ் மற்றும் பிரவுன் ரைஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகின்றன. இது சருமம், முடி  ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
 
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கிவிடும். எலுமிச்சைச் சாற்றை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டு முகத்திலும் கழுத்திலும் பரவலாக தடவ வேண்டும். இந்த எளிய முறை சருமத்தின் எண்ணெய் பசையை போக்கி சிறந்த மாற்றத்தை உடனே கொடுக்கும்.
 
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் டோனர் உபயோகப்படுத்துவால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாது சருமத்தில் இருக்கும்  வெடிப்புகளைப் போக்கி சரும அழகை மேம்படுத்தும்.