வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

காந்த சக்தி தன்மை கொண்ட மூலிகை எது தெரியுமா...?

தொட்டால் சுருங்கி தொட்டவுடன் தன்னை சுருக்கிக் கொள்ளக்கூடிய காந்த சக்தி தன்மை கொண்ட மூலிகை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து தொட்டு வந்தாலே மனோசக்தி அதிகரிக்கும்.

ஆயுர்வேத மருத்துவத்திலும், யுனானி மருத்துவத்திலும் பயன்படுகின்றது. தோல் வியாதிகள், குழந்தை பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது.
 
உடல் குளிர்ச்சி அடையும். வயிற்றுப்புண் ஆறும் மூலம் நோய் நீங்கும். மேலும் ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் பதினைந்து கிராம் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.
 
தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை பஞ்சு போல தட்டி, ஒரு மண் குடுவையில் போட்டு கால்படி தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி சுண்ட காய்ச்சவும்.
 
சுண்ட காய்ச்சிய பின்னர் வடிகட்டி ஒரு வேலைக்கு கால் அவுன்ஸ் வீதம் தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று வேலை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு தொட்டால் சுருங்கி இலைக்கு பத்து மடங்கு கொதிக்கின்ற தண்ணீர்விட்டு ஆறின பின் வடிகட்டி வேலைக்கு ஒரு அவன்ஸ் வீதம் தினம் இரண்டு மூன்று வேலை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல் அடைப்பு தீரும்.
 
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை பத்து கிராம் அளவு காலை தயிரில் சாப்பிட வேண்டும்.
 
தொட்டால் சுருங்கி இலை மற்றும் அதன் வேரினை நன்கு உலர்த்தி சூரணம் செய்து வைத்துக்கொள்ளவும். அந்த சூரணத்துடன் பசும்பால் சேர்த்து கொடுப்பதன் மூலமாக மூல நோய் குணமடையும். தொட்டால் சுருங்கி இலைச் சாற்றை மூலம் உபாதைகளுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும்.