1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருப்பதால் என்ன பலன்கள்...?

புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தாயார் மற்றும் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். 

இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் தீரும். செல்வம் செழிக்கும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும். 
 
சனி தோஷம் இருப்பவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலிற்கு சென்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். 
 
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
 
அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி அர்த்தாஷ்டம சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர்கள் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிரார்த்திப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.
 
புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல் நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும். வரும் புரட்டாசி சனிக்கிழமை நாம் இந்த விரதத்தை மேற்கொண்டு; பெருமாள் மற்றும் குலதெய்வத்தின் அருளையும் சேர்த்து பெறுவோம்.