1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Do you know what nutrients contained in Custard apple...?

சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள் என்ன தெரியுமா...?

சீதாப்பழம்
சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.
சீதாப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துப்பொருட்களால், உடலில் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தச்சோகை நோயை போக்கும்.  மேலும் உடல் சோர்வை போக்கி உடலுக்கு புத்துணர்வு தரும்.
 
சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயை குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை  அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
 
சீதாப்பழங்களின் தோல் நீக்கி விதைகளை எடுத்துவிட்டு சதைப்பகுதியை அப்படியே அல்லது ஜூஸாக அருந்தி வர, இதய நோய்கள் யாவும்  அணுகாது வாழலாம்.
 
விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள்  ஒழிந்து விடும்.
 
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
 
சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கிவி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!