1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (17:31 IST)

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்ன தெரியுமா...?

உருளைக்கிழங்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து வளமான அளவில் உள்ளது.


உருளைக்கிழங்கை சமைப்பதை பொறுத்து ஊட்டச்சத்துகள் மாறுபடும். உருளைக்கிழங்கை வறுப்பது அவற்றை வேகவைப்பதை விட அதிக கலோரிகளையும் கொழுப்பையும் அதிகக்கிறது.

உருளைக்கிழங்கில் வளமான அளவில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. உருளைக்கிழங்கின் தோலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது செரிமான இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் தடுக்க உதவுகிறது.