1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (11:43 IST)

பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ள பிஸ்தா !!

பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ ஆனது, புறஊதாக் கதிர்களால் தோல் பாதிக்கப்படாமல் இருக்கவும், தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவுகிறது.


பிஸ்தா பருப்பில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரைப் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், பைடோ ஊட்டச்சத்துகள் உள்ளிட்ட பல வகையான சத்துக்கள் பிஸ்தாவில் நிறைந்துள்ளன. பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட்டு வந்தால் நியாபகச் சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல  இரத்த ஓட்டத்தை சீராக்கி அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம்.

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது, மற்றும் குடலில் நல்ல பாக்டீரியா வளர்வதற்கு உதவி செய்கிறது.