வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:16 IST)

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கருப்பு கவுனி அரிசி !!

கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ‘எல்டிஎல்’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.


கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிட்டால் தமனியில் கொழுப்பு படிதலை குறைத்து மாரடைப்பு மற்றும் பக்க வாதம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது.

கருப்பு கவுனி அரிசியில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
உடல் எடையை குறைக்க

கருப்பு கவுனி அரிசியில் குறைவான அளவில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களும் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

கவுனி அரிசியில் இருக்கும் ஆந்தோசைனின், நம்முடைய மன அழுத்தத்தை குறைத்து சிறந்த மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைகிறது.

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. மற்ற அரிசியில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட கருப்பு கவுனி அரிசியில் இரண்டு மடங்கு நார்ச்சத்து அதிகம் உள்ளது.