வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சளி மற்றும் இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை...!

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், ஆடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா  காசநோயாக கூட மாறநேரிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி  சாறு எடுத்து. 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும்.
 
கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமடையும்.
 
சைனஸ், தலைபாரம் நீங்க கற்பூரவள்ளிச் சாற்றுடன் 200 மி. சம அளவு நம்மெண்ணெய் கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
 
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து  பல நோய்களை உண்டாக்கிவிடும். கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து  வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.
 
கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும்.  மூச்சுக்குழல் அடைப்பு சீராகும்.
 
குழந்தைகளின் மாந்தம் நீங்க கற்பூரவள்ளி இலைச் சாறு (5 மில்லி) அளவுக்கு எடுத்து குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் விலகும்.