வியாழன், 2 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:50 IST)

உடலுக்கு நன்மை பயக்கும் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட ஏலக்காய் !!

ஏலக்காய் மணம் சுவை அளிப்பதோடு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக இருக்கிறது. பழங்காலத்திலிருந்தே ஏலக்காய் இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றன.


ஆயுர்வேத மருந்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாயில் ஏற்படும் தொற்று புண்கள், தொண்டையில் ஏற்படும் பாதிப்பு, மார்பு பகுதியில் ஏற்படும் சுணக்கங்கள், வாய் சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி போன்றவைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.

பச்சை ஏலக்காய் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி,சோடியம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாமிசம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. செரிமானக் கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் ஏலக்காய்.

சைனஸ் நோயால் அவதிப்படுபவர்களுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக விளங்குகின்றது. ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாக்டீரியாவில் உள்ள நுண்ணுயிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்க உதவுகிறது .

ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சினை கொண்டவர்கள் மருந்துகளுடன் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். நுழைவுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரித்து எளிதாக சுவாசிக்க உதவுகிறது.

ஏலக்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு சருமம் பொலிவுடன் காணப்படும்.