1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:22 IST)

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் கருஞ்சீரகம் !!

கருஞ்சீரகத்தில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B1, வைட்டமின்கள் B2 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.


தினசரி இரண்டு கிராம் கருஞ்சீரகத்தை உட்கொள்வதால் இன்சுலின் எதிர்ப்பு குறைவதோடு, கணையத்தில் பீட்டா செல்களின்  செயல்பாடு அதிகரிக்கும்.

கருஞ்சீரகம் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை நீக்குகிறது.

சிறுநீரக  மற்றும் பித்தப்பை கற்களுக்கு ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியை நன்கு ஆரவைத்த தண்ணீரில் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் கரையும்.

சளி இருமல் உள்ளவர்கள் அரைத்த பூண்டு விழுதுடன் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடி மற்றும் தேன் இம்மூன்றையும் கலந்து சாப்பிடுவதால் இருமல் குணமாகும். அத்துடன் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும்.

தீராத சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. தினமும் பாலில் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் சேர்த்து குடிப்பதன் மூலம் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமடையும்.

தீராத ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்களும், தினமும் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.