1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (14:44 IST)

கூந்தல் பிரச்சினைகளை போக்க உதவும் இயற்கை வழிகள் !!

முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் வாரம் ஒருமுறை என தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும்.


புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் முடி கொட்டாது. பொடுகும் வராது. கூந்தல் பட்டுப்போல் காட்சியளிக்கும்.

தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பயனை தரும்.

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.

கூந்தல் அடர்த்தியாகவும், நீலமாகவும் வளர எலுமிச்சை மிகவும் உதவி செய்கின்றன. அதாவது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தயிர் கலந்து தலைக்கு மசாஜ் செய்து பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலை சுத்தமாக காணப்படும். பொடுகு தொல்லை நீங்கும். அதேபோல் முடி உதிர்வு பிரச்சனை தடுக்கப்படும்.