1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (14:07 IST)

இயற்கையான முறையில் மூலிகை குளியல் பொடி தயாரிப்பது எப்படி...?

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளிக்கும்போது உடல் பளிச்சென மின்னும், முகமும் உடலும் பொலிவு பெறுவதோடு மனமும் உற்சாகமடையும்.


மூலிகை குளியல் பொடி தயாரிக்க சந்தனம், அகில், அதிமதுரம், மரிக்கொழுந்து, துளசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், வெட்டி வேர், ஜாதிக்காய், திரவியப்பட்டை, மகிழம் பூ, ஆவரம் பூ, வேம்பு, செம்பருத்தி பூ, பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, கார்போகரசி, விளாமிச்சை, ஆரஞ்சு பழத்தோல், பச்சை பயறு மற்றும் கடலை பருப்பு ஆகிய பொருட்களை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

இயற்கை மூலிகை குளியல் பொடியை தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் முகப்பருக்கள் மற்றும் முகபருவினால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மறைந்து முகம் மென்மையாக மாறும்.


தோல் நோய்கள், தேமல், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவற்றை நீக்கும் அதுமட்டுமின்றி சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் வரி வரியாக இருக்கும், சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும்.

தினமும் இதனை உபயோகித்து குளித்து வர சிறு கட்டிகளும் வரிகளும் மறைந்து போகும்.வெயில் காலங்களில் வியர்வையினால் உண்டாகும் வியர்வை நாற்றத்தைப் போக்கி நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. மேலும் வெயிலினால் உண்டாகும் உடல் வெப்பத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறுது.

இயற்கை மூலிகை குளியல் பொடியை பாலில் கலந்து பசைபோல் செய்து முகம், கழுத்து போன்ற கருமையான பகுதிகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி முகம் வென்மையாக காணப்படும். இந்த இயற்கை குளியல் மாவானது பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.