1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Can the nutrients in beans help prevent constipation...?

பீன்ஸில் உள்ள சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்க உதவுகிறதா...?

பீன்ஸ்
தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். பீன்ஸ் சாப்பிடுவதால், அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.


பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. பீன்ஸில் உள்ள ‘இசோபிளவோன்ஸ்’ எனப்படும் உயிர்சத்து உடலுக்கு வலுவாக்கும் தன்மை கொண்டது. பீன்ஸ் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.

பீன்ஸில் உள்ள மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.

பீன்ஸ் இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். பீன்ஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்....?