1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (09:40 IST)

மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் அதிமதுரம் !!

Athimathuram
அதிமதுரத்தைத் தூளாக்கி, அதை பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். தலையிலுள்ள புண்கள் குணமாகும். தலைமுடி பட்டுப்போல பிரகாசிக்கும்.


அதிமதுரத்தின் வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தால் வாய்ப்புண்கள் ஆறும். இளமையில் வாலிப சக்தியை இழந்த வாலிபர்களுக்கு அதிமதுரம் ஒரு அரு மருந்தாக பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டு வருகிறது.

அதிமதுரம், மற்றும் தேவதாரம் இவைகள் வகைக்கு ஒன்றாக 35 கிராம் அளவு எடுத்து அதை பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்களும் நிவர்த்தியாகும்.

அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய்யை தடவி, குன்றி இலையை ஒட்டவைத்தால் பிடிப்பும், சுளுக்கும் குணமாகும். அதிமதுரத்தின் வேர்கள் இலேசான மலமிளக்கியாக செயல்படுவதால் மலச்சிக்கல் இருக்கும் போது இதை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். தொடர்ந்து 4 நாட்கள் தேநீர் குடித்து வந்தாலே மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கீல்வாதம், மூட்டுவலி, மூட்டுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வலியை குறைக்க அதிமதுரம் பயனளிக்கும்.