செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (17:15 IST)

உருளைகிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா...?

Potatoes
உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரதம் குறைந்த அளவும் உள்ளன. எனவே ஒல்லியாக இருப்பவர்கள் உருளைகிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.


உருளையில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். அதனால் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் செரிமானமின்மையால் கஷ்டப்படுபவர்களுக்கு உருளையானது சிறந்த உணவாகும்.

வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் , ஜிங்க் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. இவை அனைத்தும் உருளைகிழங்கில் நிறைந்துள்ளன. மேலும், பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும். மேலும் இது பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால், இது கீழ்வாதம் நோய்க்கு ஒரு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வேகவைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நல்ல நிவாரணம் அளிக்கும். ஸ்டார்ச் அல்லது கார்போஹைட்ரேட் அளவு உருளைக்கிழங்கில் அதிகளவு இருப்பதால், பொதுவாக உடல் எடையை அதிகரிக்க செய்யும். எனவே இதை குறைந்த அளவு எடுத்து கொள்வதே பாதுகாப்பாகும்.

உட்புற மற்றும் வெளிப்புற வீக்கம் மற்றும் அழற்சிக்கு ஏற்ற மருந்தாக உருளை விளங்குகிறது. இது மிகவும் மென்மையாக, எளிதில் செரிமானம் அடைய கூடியதாக இருக்கும். மேலும் இதனுள் அதிகமாக வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 இருப்பதால், குடல்களில் மற்றும் செரிமானம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் அழற்சி பிரச்சனைகளை தீர்க்கும்.

வாய் புண் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். பச்சை உருளைகிழங்கை அரைத்து வாய் புண்களின் மேல் தடவி வந்தால் வாய் புண்ணிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ், ஆக்ஸிஜன், வைட்டமின் பி-யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 போன்ற கொழுப்பமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. உருளைக்கிழங்கில் மேற்கூறிய அனைத்தும் இருப்பதால் மூளையின் செயல்பாடு மேம்படும்.