1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (17:06 IST)

கொள்ளுவில் என்னென்ன சத்துக்கள் உள்ளது தெரியுமா...?

Kollu
கொள்ளு நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று பார்த்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, தசைசத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன. இவை நம் உடலிற்கு நல்ல பலன்களை தரக்கூடியவை.


கொள்ளு தானியத்தில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. உடல் எடையை குறைப்பதில் மிக சிறந்த இயற்கை உணவுகளில் ஒன்றாக கொள்ளு இருக்கிறது.

தினமும் காலையில் மற்ற எந்த உணவை சாப்பிடுவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளை கொண்டு செய்யப்பட்ட சூப் அருந்துவதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கும்.

கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். அதேபோல் சிறுநீரக கற்களை வெளியேற்ற கூடியது. சிறுநீரக கற்களை வெளியேற்றுவதால் அடிவயிற்று வலி இருக்காது.  அடிவயிற்றில் வலி இல்லாமல் போவதால் சிலருக்கு இடுப்புவலி ஏற்படும், அவர்களுக்கு இடுப்புவலி தானாக குறையும். கொள்ளை ரசம் வைத்து வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வரலாம்.

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில்  உள்ளன. கொள்ளு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கின்றன. இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் இழந்த சத்துக்களை ஈடு செய்கிறது.