1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (15:31 IST)

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும் ஆடாதோடை !!

Aadathodai
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடை என அழைக்கப்படுகிறது. சில இடங்களில் சிறு செடியாகவும், மற்றும் ஒரு சில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.


இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. இது வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும். சிறுநீரை பெருக்கும். கபத்தை வெளியேற்றும். மூச்சுதிணறலை நீக்கும். ஆஸ்துமாவை குணமாக்கும். கண்வலி போக்கும். வாயு கோளாறுகளை நீக்கும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தும் சிறந்த மருந்தாக ஆடாதோடை விளங்குகிறது. இது நுரையீரலில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சீதபேதியினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஆடாதோடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க சீதபேதி விரைவில் குணமாகும்.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடி போல செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, சாப்பிட்டால் உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும்.

நெஞ்சில் சளி, அதனுடன் உடல்வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுத்தால் உடல்வலி பறந்தோடும்.

ஆடாதோடை இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவிட்டு, பின்பு வடிகட்டி தேன் சேர்த்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, இருமல், சுரம் போன்றவை குணமாகும். ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்றவை குணமாகும்.