1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (13:39 IST)

மரச்செக்கு எண்ணெய்யின் நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Marachekku Oil
மரச்செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்குகிறது.


இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது. அதுபோக உடல் சம்பந்தப்பட்ட அனைத்துக்குமே ஒரு தீர்வாக அமைகிறது.

சுத்தமாக தயாரிக்கப்பட்ட செக்கு தேங்காய் எண்ணெய் உடல் பராமரிப்புகளுக்கும் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வை தருகிறது.  மேலும் கடலையில் இருந்து எடுக்கப்படும் கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுவதால் ஆரோக்கியமான உணவை நாம் பெறமுடிகிறது. செக்கு எண்ணெய் பெரும்பாலும் உணவுக்கு  மட்டுமில்லாமல் மருத்துவம் சம்பந்தமாகவும் பயன்படுகிறது.

ஏனெனில் செக்கு எண்ணெய் தயாரிப்பில் சூடாகாமல் அவற்றில் உள்ள உயிர்சத்துக்களை அப்படியே நமக்கு தருகின்றன. மேலும் அவை செக்கில் ஆட்டிய பிறகு, அதனை பித்தளை பாத்திரத்தில் எடுத்து அதனை வெயிலில் வைத்துவிடுவார்கள். இதனால் சூரிய ஒளியில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அதனால் அந்த எண்ணெய் அடர்த்தியாக காணப்படுகிறது. 5 லிட்டர் தேவைப்படும் இடத்தில் 2 லிட்டரே தேவைப்படுகிறது அந்த அளவுக்கு அடர்த்தியாக காணப்படுகிறது. மேலும் சமைக்கும் போதும் அதை நாம் உபயோகப்படுத்தும்போது நல்ல மனம் வருவதையும் காணலாம்.

மரச்செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடனும் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும்.