1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (14:36 IST)

ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள ப்ராக்கோலி !!

ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேல் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது கணையத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் கணைய புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.


பிற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது ப்ரோக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். ப்ரோக்கோலியை சாப்பிடுவதன் மூலம், உடலில் சேரும் கெட்டக் கொழுப்பைக் குறைத்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.

ப்ரோக்கோலியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன, அவை சருமத்திற்கு நன்மை பயக்கிறது. அவை தோல் வியாதிகளைத் தடுக்கின்றன.

ப்ரோக்கோலியை சாப்பிடுவதன் மூலம் கண் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. ப்ரோக்கோலியில் கண்களுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ப்ரோக்கோலியில் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளன, இவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன மற்றும் எலும்பு தொடர்பான நோய்களைத் தடுக்கின்றன. பெண்கள் தங்களின் தலைமுடி தடிமனாகவும் வலுவாகவும் இருக்க ப்ரோக்கோலியை உட்கொள்ள வேண்டும். ப்ரோக்கோலி முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலைக் குறைக்கிறது.

ப்ரோக்கோலி மூளை தொடர்பான கோளாறுகளைக் குறைக்கிறது. மேலும், நினைவாற்றலை அதிகரிக்கிறது மற்றும் மூளையை கூர்மையாக்குகிறது.