1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (14:04 IST)

அன்றாடம் வெல்லம் பயன்படுத்துவதால் என்ன நன்மைகள்...?

Jaggery
வெல்லம், எடையைக் குறைக்க உதவும். இதில் உள்ள பொட்டாசியம், உடலில் நீர் தங்குவதைக் குறைத்து உடல் எடையைச் சரியாகப் பராமரிக்க உதவுகிறது.


சளித்தொல்லை, இருமலால் அவதிப்படுபவர்கள் வெல்லத்தை வெந்நீரில் அல்லது டீயில் கரைத்து அருந்தலாம். வெல்லம் உடலின் நொதிகளை ஊக்குவித்து, ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துகள், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் ஏற்படும் வலிகளையும் சரிப்படுத்தும்.

வெல்லம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், வயிற்றை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுவதால் பல்வேறு நோய்களைத் தடுத்து கோடைகாலத்துக்கு ஏற்ற உணவுப் பொருளாக உள்ளது.

ரத்தத்தில் தேவையான அளவு சிவப்பணுக்களைப் பராமரிக்க உதவுவதன் மூலம் வெல்லம் உடல் சோர்வடைவதைத் தடுக்கிறது. ஓரளவு வெல்லத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது, ரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்ய உதவும்.

வெல்லத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் கனிமச் சத்துகளும் இயற்கை எதிர்வினைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன. வெல்லம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

வெல்லத்தில் நிறைந்திருக்கும் அதிக அளவு மக்னீசியம் உட்பொருள், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. வெல்லத்தின் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அமிலங்களின் அளவை சரிவரப் பராமரிக்க உதவுவதால் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்க வழிசெய்கிறது.