புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 2 மே 2022 (18:41 IST)

கோதுமைப்புல் சாறு அருந்துவதால் என்னவெல்லாம் நன்மைகள் தெரியுமா...!!

Wheat grass juice
கோதுமைப்புல்லின் சாற்றைக் குடிப்பதால் அது இரத்தத்தை சுத்தம் செய்கிறது. ஈரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது. பெருங்குடலில் உள்ள என்ற பாகத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது.


மலச்சிக்கலைப் போக்குகிறது. முகப்பரு, உடலில் உள்ள வடுக்களைப் போக்க உதவுகிறது. சாற்றைக் கொப்பளித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். தொண்டைப் புண்ணும் குணமாகும்.தோல் வியாதிகளைக் குணப்படுத்தும். முக்கியமாக வெண்புள்ளி தேமலைப் போக்க வல்லது.

50 கிராம் கோதுமைப் புல்லை எடுத்துக் கழுவி நன்கு அரைத்து 150 மில்லி நீர் கலந்து வடிகட்டியபின் அதில் தேன் கலந்து சாற்றைக் குடிக்கலாம். தயார் செய்தவுடன் குடித்து விட வேண்டும். இதனால் புற்று நோயை எதிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.

கோதுமைப்புல் சாறு பல் வலி உண்டாகும் போது வாயில் ஊற்றிக் கொப்பளித்துக் குடித்தால் பல் வலி குறையும். எல்லா நாட்பட்ட நோய்களும் இதன் சாற்றால் குணமடையும். உடல் பருமன், நீரிழிவு நோய் குணமடைகிறது.

கோதுமை புல் சாறில் இருக்கும் அதிக அளவு என்சைம்கள், உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், வாயு, வீக்கம் மற்றும் வயிற்று அசெளகரியம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உடலில் தேங்கும் நச்சுகளையும், கெட்ட கொழுப்புகளையும் நீக்குவதால் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

கோதுமை புல் சாறில் இருக்கும் குளோரோஃபில் மூலக்கூறுகள் ஹீமோகுளோபினுக்கு ஒத்ததாக இருப்பதுடன், ரத்த அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், சீராக இருக்கவும் கோதுமை இலைச்சாறு உதவுகிறது.