1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Benefits of adding guava fruit frequently !!

கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள் !!

கொய்யாப்பழம்
நோயின் ஆரம்பமே மலச்சிக்கல்தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்துதான் ஆரம்பிக்கும். மலச்சிக்கலைப் போக்கினாலே நோயில்லா நல்வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் கூற்று. 
 


நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்றுப்புண் ஆறும்: தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க  உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிக நல்லது. 
 
மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம். கல்லீரலை பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி  சேர்த்துக் கொள்வது நல்லது.
 
நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மையும்  உண்டு. 
 
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப்பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். 
 
பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
 
ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட  அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கோவிலுக்கு செல்லும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் !!