வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படும் நுங்கு !!

நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. 

நுங்குக்கு நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உண்டு. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு  கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 
 
நுங்கில் உள்ள நீரானது பசியை தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கு நுங்கு அருமருந்தாகும். சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, அதிக  தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அப்படியானவர்கள் நுங்கை சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். 
 
ரத்தச்சோகை உள்ளவர்கள் தொடர்ந்து நுங்கை சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை  தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது நுங்கு. அதேபோல் பதநீரும் நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த இயற்கை பானம். உடல்  உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது.
 
வெயில் காலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், நம் உடலை பாதுகாக்கும் சத்துக்கள் இதில் அதிகம். பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத்  தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
 
நுங்கை இளநீருடன் ஜூஸ் போல அருந்தலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன், சுக்கு சேர்த்துச்  சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்.
 
சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் சரியாகும்.
 
நுங்கை அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் அல்சர், வயிற்றுப்புண் பிரச்சினைகள் தீரும். இப்படி ஏராளாமான நன்மைகள் நுங்கில் இருக்கின்றன.