திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (15:08 IST)

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துமா பீட்ரூட் ஜூஸ் !!

பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது.


உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இதய நோய் வராமல் பாதுகாக்கும். இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரத்த அணுக்களின் எண்ணிக்கையை சீராக பராமரிப்பதற்கு பீட்ரூட் ஜூஸ் உதவுகிறது.  இரத்த சோகை உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.

கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் ஜூஸ் பருகுவதன் மூலம் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களுக்கு புத்துயிர் கொடுக்க உதவும். கல்லீரல் பிரச்சனையால் பித்தம் அதிகமாகி பித்த வாந்தி எடுப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் வாந்தி கட்டுப்படும்.

புற்றுநோய் வராமல் பாதுகாப்பதிலும் பீட்ரூட்டின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் அளவிற்கு புற்றுநோய் எதிர்ப்புப் பொருள் பீட்ரூட்டில் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருகினால் புற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது.

உடலிலுள்ள அசுத்தங்களை வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் பீட்ரூட் ஜூஸ் பருகிவரலாம்.அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.