1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (09:50 IST)

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உணடாகும் நன்மைகள் !!

‘கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால் இதில் அர்த்தம் நிறைந்தது. கொழுப்பை குறைப்பதில் கொள்ளுவிற்கு முக்கிய பங்கு உள்ளது.


கொள்ளு நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று பார்த்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, தசைசத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன.

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கும்.

கொள்ளுவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரைப் பருகினால், ஜலதோஷம் குணமாகும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால், காய்ச்சலை குணமாக்கும்.

கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில்  உள்ளன. வாரம் இரண்டு முறை கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் குணமாகும்.

கருப்பு கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். அதேபோல் சிறுநீரக கற்களை வெளியேற்ற கூடியது.