1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 12 பிப்ரவரி 2022 (12:45 IST)

சோம்பு தண்ணீர் கொதிக்கவைத்து குடிப்பதால் கிடைக்கும் மருத்துவ நன்மைகள் !!

சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும், இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் மற்றும் பக்கவாட்டில் இருக்கக்கூடிய கொழுப்புகக்ளை குறைப்பதற்கு உதவுகிறது.


தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். மாத்திரை சாப்பிடுபவர்கள் இதனுடன் சேர்த்து சோம்பு தண்ணீர் குடித்து வரலாம்.

அசைவ உணவுகள் செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும். சிறிது சோம்பு சாப்பிட்டால் செரிமானம் சீராக நடப்பதற்கு உதவி செய்யும்.

சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், நம் உடலில் தேவையில்லாமல் தங்கி உள்ள கொழுப்புகளை வெளியேற்றும், குறிப்பாக வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது. இதனால் உடல் எடை குறையும்.

பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சோம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள வேதிப்பொருள்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சொம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் வீக்கங்கள், வயிறு உப்பிசம் ஆகியவற்றிற்கு சோம்பு நல்ல தீர்வு தரும்.