செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டை நீக்கும் உணவுகள் என்ன...?

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, வாழ்க்கை முறை, உணவு முறை போன்றவை காரணமாக அமைகிறது.


அன்றாட உணவு முறையில் மாற்றங்களை செய்வதன் மூலம் ஆரோக்கியமாகவே விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

திராட்சை ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும். திராட்சை பழம் அல்லது உலர் திராட்சையை சாப்பிடலாம்.

திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து இயக்கம், விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, பொட்டாசியம், காப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன.

தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது.

முளைக்கட்டிய வெந்தயத்தை வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதி செய்யலாம். வெந்தயத்தைப் பொடித்து நீரில் கலந்தும் குடித்து வரலாம்.

முருங்கை காய், பூ மற்றும் கீரை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டுவந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் இல்லற வாழ்வில் ஈடுபாட்டை உண்டாக்கும்.

ஆண்கள் தினமும் 5 முதல் 10 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பூண்டில் இருக்கும் செலினியம் விந்தணுவின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. பூண்டை பச்சையாக சாப்பிடலாம் அல்லது பாலில் வேகவைத்து குடிக்கலாம்.