திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மலச்சிக்கலை போக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் பீன்ஸ் !!

பீன்ஸ் இரும்புச்சத்தைக் கிரகிக்கும் தன்மை பெற்றது. செரிமான சக்தியை அதிகரிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். பீன்ஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப்  போக்கும்.

பீன்ஸில் உள்ள மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக்  குறைக்கிறது.
 
பீன்ஸில் உள்ள வைட்டமின் பி-12 கருவுற்ற பெண்களுக்கு கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏற்படாமலும் தடுக்கிறது. பீன்ஸில் வைட்டமின்  பி-6, தையமின், வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
 
பீன்ஸை உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமான சக்தி அதிகரிக்கும். வாயுத்தொல்லை நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். பீன்ஸ்  இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது.
 
பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. பீன்ஸ் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடலில் மெதுவாக கரைவதன் காரணமாக, இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்வதைத் தடுக்கும்.