வியாழன், 2 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விநாயகர் வழிபாட்டில் தோப்புக்கரணம் போடுவதின் பலன்கள் !!

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதன் மூலமும் நம் உடலில் இருந்து குண்டலினி சக்தி தட்டி  எழுப்பப்படுகிறது. 

இதனால் நமது நாடி நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது. இந்த நிகழ்வு வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
 
தோப்புக்கரணம் போடும்போது வலது காதுமடலின் கீழ்ப்பகுதியை இடது கையாலும், இடது காது மடலின் கீழ்ப்பகுதியை வலதுகையாலும் அழுத்திப்பிடிக்க  வேண்டும்.
 
இடதுகை உள்ளேயும் வலதுகை வெளியேயும் இருக்குமாறு தோப்புக்கரணம் போட வேண்டும். நமது வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால் கைகளை நாம் பிடிக்கும்போது சரியான அளவில் அவை தூண்டப்படுகின்றன.
 
காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால் நமது ஞாபகசக்தி அதிகரிப்பதாக இன்றைய அறிவியல் உலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள் இதை அந்தக் காலத்திலேயே கண்டறிந்து வைத்திருக்கின்றனர்.
 
தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து புதுவித சக்தியும் உற்சாகமும் ஏற்படுகின்றது. படிப்பு, எழுத்து, கணிதம் போன்றவற்றில் கவனம்  அதிகமாகும்.