1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முருங்கைப்பூவில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும் !!

முருங்கைப்பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை-மாலை சாப்பிட்டு வந்தால் நினை வாற்றல் அதிகமாகும். சர்க்கரை நோய் குணமாகும். உடல் வலுவடையும், நரம்புகள் புத்துணர்வு பெறும். ஆண்மை அதிகரிக்கும்.

துவரம் பருப்புடன் முருங்கைப்பூவை வேகவைத்து சிறுதளவு தேங்காய் அரைத்து சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய் போட்டு கடைந்து சாப்பிட்டு வர விந்தணு  குறைபாடு நீங்கும்.
 
முருங்கைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், வாய் கசப்பு ஆகியவை நீங்கும். கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப்  பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். 
 
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு  வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
 
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்  வலுவடையும், நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
 
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண்  பார்வை குறைபாடு நீங்கும்.
 
முருங்கை பூவை நிழலில் உலரவைத்து பொடியாக்கி தினமும் கஷாயம் செய்து காலை மாலை என்று இரண்டு வேலையும் அருந்தி வந்தால் உடலில் இருக்கும்  பித்தம் குறைந்து, உடலின் அசதி நீங்கி உடல் நிலை சீரடையும்.