1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஏலக்காயை எந்த முறையில் சாப்பிடுவதால் பயன்கள் கிடைக்கும்....?

ஏலக்காயுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.

வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வரவேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.
 
கர்ப்பிணி பெண்களுக்கு, அந்த கர்ப்பக் காலத்தில் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது உண்டு. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்  நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும். வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் சிறந்த மருந்து.
 
ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். செவ்வாழைப் பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
 
வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.
 
நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் போன்றவற்றுக்கு ஏலக்காய் ஓர் சிறந்த மருந்தாகும்.