தொடர்புடைய செய்திகள்
- மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது...?
- கூந்தல் பிரச்சனைகளை சரி செய்யும் செம்பருத்தி..!!
- பெண்களின் தலை முடியின் வளர்ச்சி உதவும் கற்றாழை எண்ணெய்...!!
- சில பயன்தரும் சித்த மருத்துவ குறிப்புகள் பற்றிப் பார்ப்போம்...!
- கண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்...!!
துளசியின் அற்புத மருத்துவ பலன்கள்!!
தினந்தோறும் காலையில் மூன்று திளசி இலை, மூன்று மிளகு இவைகளை தண்ணீர் விட்டு அரைத்து குடித்து வந்தால் வியாதி என்ற பயமே ஏற்படாது.
காலை மாலை மூன்று துளசி இலைகளை உட்கொண்டு வந்தால் உடல் பிரகாசிக்கும்.
தோல் சம்பந்தமான நோய் உடையவர்கள் அதாவது சொரி, சிறங்கு, படை, நமைச்சல் முதலியவைகளுக்கு துளசியை உண்டும், மேற்பூச்சாக தடவிவந்தால் நாளடைவில் மறைந்துவிடும்.
அம்மை போட்டு காய்ச்சல் வந்தால், துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சமமாக சேர்த்து அரைத்துத் தடவுவதால் காய்ச்சல் நீங்கி, அம்மையும் சீக்கிரம் மறைந்துவிடும்.
குழந்தைகளுக்குப் பெரியம்மை வந்தால் துளசிச் சாற்றை மேலே தடவினால் சீக்கிரம் மறைந்துவிடும்.
குழந்தைகள் வாந்தியெடுத்தால், துளசிச் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் வாந்தி நிற்கும்.
வாந்தி, பேதியும் ஏற்பட்டால் அவற்றிற்கு துளசி விதையை அரைத்துப் பசும்பாலில் கலந்து கொடுக்கலாம்.
தேனுடன் உப்பு, துளசிச் சாற்றையும் கலந்து சாப்பிட காது சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
காதில் வலி, குத்தல் ஏற்பட்டால் இரண்டு துளி துளசிச் சாற்றை காதில் விடவும்.
அடுத்த கட்டுரையில்
