1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (11:47 IST)

எளிதில் கரையக்கூடிய நார்பொருட்கள் அதிகமாக உள்ள சோம்பு !!

சோம்பு விதைகளின் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுபொருட்கள்,  வைட்டமின் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன.


பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன. சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன.

உடலுக்கு வலுவூட்டும் தாதுப்பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம்,  செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன. தாமிரம் தாது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.

சோம்பு விதைகளில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும் செரிமானத்திற்கும் இதுஅவசியம்.

இதிலுள்ள பொட்டாசியம் தாது உடற்செல்கள் வழவழப்பாக வைத்திருப்பதுடன் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

வைட்டமின் ஏ, இ, சி போன்றவையும் பி குழும வைட்டமின்களான தயாமின், பைரோடக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.