1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 2 பிப்ரவரி 2022 (10:56 IST)

உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ள கரிசலாங்கண்ணி !!

கரிசலாங்கண்ணியில் இரண்டு சத்துகள் உள்ளன. ஒன்று தங்கச் சத்து, மற்றொன்று இரும்புச் சத்து. இது போன்று அபூர்வமான சத்து இந்த கீரையில் மட்டும்தான் உள்ளது.


கரிசலாங்கண்ணி மிகச் சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் அழுகும் நிலையில் உள்ள புண்கள், வெட்டுக் காயங்களுக்கு இலையை அரைத்து சாறு பூசினாலும், புண்கள் மேல் வைத்துக் கட்டினாலும் மிக விரைவில் புண்கள் ஆறிவிடும்.

நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகள் நமது உடலுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.

கரிசலாங்கண்ணி இலையைப் பச்சையாகவும், பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவும், எலுமிச்சம்பழம் சேர்த்து பச்சடியாகவும் சமைத்து உண்ணலாம். இதனால் உடலிலுள்ள கழிவுகள் சிறு நீரகத்தின் வழியாக வெளியேறும். இரத்தம் சுத்தமடைந்து ஆரோக்கியத்தை அளிக்கும்.

இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும். உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும். முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.

கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும். பித்த நீர், கப நீர் வெளியாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.