புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:44 IST)

பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ள முள்ளங்கி !!

முள்ளங்கி, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான காய்கறியாகும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன.


முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முள்ளங்கியுடன், முள்ளங்கி இலைகளையும் உட்கொள்ள, மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தலை முடியை வலுவானதாக மாற்ற முள்ளங்கி சாப்பிட வேண்டும். முள்ளங்கி சாறு முடி உதிர்தலைக் குறைக்க பயனுள்ளதாக அமைகிறது. முள்ளங்கி சாற்றைக் கொண்டு தலைமுடியில் மசாஜ் செய்து சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த, செயல்முறையை வாரத்திற்கு இருமுறை செய்வதன் மூலம் கூந்தலின் வேர்களை பலப்படுத்த இயலும்.

முள்ளங்கியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் காரணமாக,  மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்க முள்ளங்கி பயனுள்ளதாக அமைகிறது.