செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத மருத்துவ குறிப்புகள்...!!

இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும். உடல் சக்தி பெற, இரவு உணவாக வாழைப்பழம்  2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
கார்ப்பிணிகள் சாப்பிட: தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால், நடுக்கம்,  மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
 
குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.
 
உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
 
வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து வெட்டுக் காயத்தின் மீது பூசிவர வெட்டுக்காயம் விரைவில்  ஆறிவிடும்.
 
உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு  நீங்கும்.
 
சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.
 
வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும். காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
 
நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.
 
மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர  மேகரோகம் குணமாகும்.