புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

கர்ப்பிணிகளுக்கு உடல்நல நன்மைகள் தரக்கூடிய கொய்யா பழம்...!!

கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. அதனால், கர்ப்பிணிகளின் எதிர்ப்பு சக்தி என்பதை இந்த கொய்யா தருகிறது. மேலும் கொய்யா பழம், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் முதலியவை  தவிர்க்கப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப நீரிழிவு என்பது வழக்கமாக உண்டாகக்கூடியது தான். குறிப்பாக உங்களுடைய 24ஆம் வாரத்தில். இதனால், இரத்த சர்க்கரை நீரிழிவு என்பது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க, கொய்யா சாப்பிடலாம்.
 
கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன்கள் குறைவாக சுரக்க, இதனால் மலச்சிக்கல் அல்லது மூல நோய் ஏற்படலாம். கொய்யா பழத்தில் பெரிதளவில்  நார்சத்து இருப்பதால் மிகவும் நல்லது.
 
கர்ப்பிணிகளுக்கு கேன்சர் வருவது அரிது. இருப்பினும், வரும்முன் காப்பதே நலம் என்பதால், ஆக்ஸிஜனேற்ற பண்புக்கொண்ட கொய்யாவை  சாப்பிடுவது நல்லது. கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், உங்களுக்கும், கருவில் இருக்கும் உங்கள் குழந்தைக்குமான கண்  குறைப்பாட்டை போக்க கொய்யா உதவுகிறது.
 
கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9ம் இருக்கிறது. இதனால், உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.
 
கொய்யா பழத்தில் வைட்டமின் சி, ஈ, கரோட்டினாய்ட், ஐசோ பிளேவனாய்ட், பாலிபீனால் என ஆக்சிஜனேற்ற பண்பு கொண்ட தன்மைகள்  இருக்கிறது. இதனால், கிருமிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவாக அமைகிறது.
 
கர்ப்பிணிகள் கொள்ளும் மன அழுத்தத்தினால் கார்டிசோல் வெளியேறுகிறது. இதனால் உங்கள் உடல் நிலைமை மோசமாகக்கூடும். இந்த கொய்யா பழத்தில் மெக்னீசியம் பெருமளவில் இருப்பதால், உங்கள் தசை மற்றும் நரம்பினை சமநிலையில் வைத்துக்கொள்கிறது.