அதிக மருத்துவ குணங்களை கொண்ட அற்புத மூலிகை வல்லாரை !!
வல்லாரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, இந்த கீரை சரியான அளவில் கொண்டுள்ளது.
இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். வல்லாரை ஞாபக சக்தியை மேம்படுத்துவதால் இது சரஸ்வதி கீரை என்றும் அழைக்கபடுகிறது.
நல்ல ஞாபசக்தி உண்டாக வல்லாரை இலையுடன் அரிசி, திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபசக்தி உண்டாகும்.
வல்லாரை இலையுடன் பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு தினமும் உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் குணமாகும்.
வல்லாரையின் இலைகள் வட்ட வடிவ அமைப்பை கொண்டது. மேலும் வேர் அதிகமாகவும், இலை சிறியதாகவும் உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் கொண்டது.
ஒரு கைப்பிடியளவு வல்லாரை கீரையைப் பச்சையாக நன்கு மென்று சாப்பிட்ட பின், பசும்பாலை குடித்து வந்தால், மாலைக்கண் நோய் குணமாகும். காலை நேரத்தில் வல்லாரையை மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணியும்.
வல்லாரை சாப்பிடும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. மேலும் புளி மற்றும் காரம் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது. அப்போதுதான் அதன் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.
இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.