அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் திப்பிலி !!
திப்பிலிக்கு பல விதமான மருத்துவ குணங்கள் உள்ளது. சித்த மருந்துகளில் திப்பிலியின் பங்கு மிகமுக்கியதுவம் வாய்ந்தது.
திப்பிலி தூள் அரை தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து உண்டு வர குரல் வளம் பெரும். தேமல் குணமாக திப்பிலி தூள் அரை தேக்கரண்டி அளவு எடுத்து கொள்ளவும். அதனை தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை ஒரு மாதம் வரை உண்டு வர தேமல் குணமாகும்.
திப்பிலி பொடியினையும் கடுக்காய் பொடியினையும் சம அளவு எடுத்து தேன் விட்டு குழைத்து அரைதேக்கரண்டி அளவு எடுத்து காலை, மாலை என இருவேளை தொடர்ந்து உண்டு வர இழைப்பு நோய் குணமாகும்.
திப்பிலியை நன்றாக பொடி செய்து, பசும்பால் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இருமல் ,வாயுத் தொல்லை மற்றும் முப்பிணிகள் நீங்கும். இதனை உண்டு வருவதனை மூலம் ஆண்மை பெருகும். திப்பிலிப்பொடி ஒரு மடங்கில் மற்றும் இரண்டு மடங்கில் வெல்லம் கலந்து உ ண்டு வர விந்து உற்பத்தி பெருகும்.
திப்பிலியை இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து நீருடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வர இருமல், வாயு நீங்கும். செரிமான சக்தி அதிகரிக்கும்.
திப்பிலியை சுத்தம் செய்து அதனை நெய்யில் சேர்த்து நன்றாக வறுத்து தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் இதனை அரை தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் சம அளவு அதாவது அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு, நாக்குச் சுவையின்மை நீங்கும்.
திப்பிலியை வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து காலை பாலை உண்டு வர இருமல், தொண்டைக்கம்மல், வீக்கம், பசியின்மை ஆகியவை நீங்கும்.