1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (17:13 IST)

கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் !!

உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய கீரைகள் வரிசையில் முன்னணியில் இருப்பது கரிசலாங்கண்ணி கீரை தான். அதனால் தான் சித்தர்கள் இதனை கீரைகளின் அரசி என்று அழைக்கிறார்கள். 

இராமலிங்க அடிகளார்  கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று சிறப்பித்துக் கூறுகிறார். கரிசலாங்கண்ணி கீரையை உண்பதாலும் இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருமையாக இருக்கும். இவை ஒரு இயற்கை கூந்தல் தைலம் ஆக இருக்கின்றது. 
 
எடை, உடல் பருமன், தொந்தியை குறைக்க விரும்புவோர் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கரிசலாங்கண்ணியில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலை உணவாகவும் எடுத்துக் கொண்டால் நல்லது. 
 
கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி  பூ, மருதாணி, அவர் அவர் இல்லத்தில் அனைத்தையும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் போட்டு தைலமாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், உடம்பில் பித்தத்தை சரிசெய்து, தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் இளநரையையும் சரிசெய்யும். 
 
இரத்த சோகை, காமாலை முதலியவற்றை கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலை பலப்படுத்தும், பித்த நீர் பெருக்கியாகவும், மலம் இளக்கியாகவும் செயல்படும். 
 
கரிசலாங்கண்ணி தோல் நோய்களை கட்டுப்படுத்தும். வலிப்பு மற்றும் இரத்தப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும்.