திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (09:23 IST)

தலைமுடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும் உதவும் சில குறிப்புகள் !!

Hair Remedy
முடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் அரிசி களைந்த தண்ணீரால் தலை முடியை அலசி வந்தாலே போதும். முடி உதிர்வு கொஞ்ச நாட்களில் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.


தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த அரிசி களைந்த தண்ணீரில் முடியை அலசி வர நிச்சயமாக நல்ல ரிசல்டை எதிர்பார்க்க முடியும். அதாவது தலைக்கு குளித்து முடித்துவிட்டு, இறுதியாக இந்த அரிசி களைந்த தண்ணீரை தலையில் ஊற்றி ஒரு முறை தலையை அலசிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வர நிச்சயம் முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும்.

அரிசி 2 கைப்பிடி அளவு, தண்ணீர் 1 பெரிய சொம்பு அளவு, கிராம்பு 7 லிருந்து 10, பெரிய பிரியாணி இலை 1 சிறுசிறு துண்டுகளாக வெட்டி இதோடு போட்டுக் கொள்ளுங்கள். மூடி போட்டு பாட்டிலை நன்றாக குலுக்கி 24 மணிநேரம் அப்படியே இந்த தண்ணீரை வைத்து விடுங்கள். அந்த தண்ணீரில் அரிசி கிராம்பு பிரியாணி இலை மூன்றுமே நன்றாக ஊற வேண்டும்.

இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து பாட்டிலில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து துருவி சாறு பிழிந்து வடிகட்டி, அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த வெங்காய சாறு, இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய்யையும், அரிசி ஊறவைத்து வடிகட்டி எடுத்து தண்ணீரோடு சேர்க்கவேண்டும்.

இந்த கலவையை நன்றாக குலுக்கி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த ஸ்பிரேவை தலையில் ஸ்பிரே செய்து ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து அதன் பின்பு தலையை வெறும் தண்ணீரில் அலசி விட்டால் கூட போதும்.