1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (09:43 IST)

தினம் ஒரு வாழை - என்ன நன்மைகள் தெரியுமா...?

எந்த வாழைப்பழம் ஆக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவை உட்கொள்வது சிறப்பாகும்.

 
இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துவதில் முன் நிற்கிறது அதிக ரத்த அழுத்தம் உடையவர்களும் ஏதேனும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.
 
ஒருவர் அதிகப்படியான எடையை கொண்டவராக இருந்தால் அவர் எடையை எவ்விதம் குறைப்பது என்று கவலைப்பட வேண்டாம். தினம் ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை உணவுக்கு முன்னர் சாப்பிட்டால் போதும் குணம் பெற்று விடலாம்.
 
ஜீரண சக்தியை அதிகப்படுத்துவதற்கு வேறு எந்த மருந்தை தேடி அலைய வேண்டியதில்லை ஒன்றே அல்லது இரண்டோ நல்ல கனிந்த மஞ்சள் வாழைப் பழங்களை சாப்பிட்டால் போதும் பெரியவர்கள் கூட சாப்பிடலாம்.
 
ஒன்றிரண்டு வாழைப் பழங்களை உட்கொண்டு ஒரு டம்ளர் பாலையும் சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்துவிடும் சக்தியும் பெற்றுவிடலாம். அதிகப்படியான சூட்டினால் உண்டாகும் மூல நோயை குணப்படுத்தும் வாழைப்பழம் நல்ல மருந்தாகிறது.
 
பேதி சரியாக வெளியேற விட்டாலும் மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும் அதிகப்படியான பேதி போனாலும் அதை நிறுத்துவதற்கு அதே வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேனில் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் போதும் குணம் கிடைக்கும்.