ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ள பாதாம் !!
பாதாமில் ஏராளமான சத்துக்களும் மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கை பிடி பாதாமினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
பாதாமில் அதிக அளவு ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி-6 போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
பாதாமில் அதிக அளவு ப்ரோடீன் சத்துக்கள் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கை பிடி பாதாமினை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சியானது சீராக இருக்கும்.
பாதாமில் அதிக அளவு வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது.
இதய ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் மிக அவசியம். பாதாமில் இவை உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் வெளியேற்றும்.
பாதாமில் உள்ள பொட்டாசியம் சத்து உங்களின் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும். பாதாமில் அதிக அளவில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்களுக்கு புற்று நோய் வராமல் காக்க உதவும்.
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதம் உண்டு வருபவர்களின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.