1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (15:51 IST)

கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் பானங்கள் என்ன...?

காபி போதுமான அளவு எடுத்து கொளவதால் கல்லீரலில் உருவாகும் நோயைத் தடுக்க முடியும் என்று சோதனை ஆய்வுகள் காட்டுகின்றன.


காபி குடிப்பதால் கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது, மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது.

உடற்பயிற்சியுடன் 1-2 கப் கிரீன் டீ குடித்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.  மேலும் உடலை உற்சாகமாகவும் இது வைக்க உதவுகிறது.

பீட்ரூட் ஜுஸில் ஃபோலேட், பெக்டின், பீட்டாலைன்கள் மற்றும் பீடைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் இதில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதனால் நம் உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை அகற்ற முடியும்.

மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால், நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் கல்லீரலில் படிந்துள்ள நச்சுக்களை அகற்ற கூடும். குறிப்பாக உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை நச்சுகளை வெளியேற்றி நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.