1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (10:35 IST)

செவ்வாழை பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!

அடிக்கடி பசி உணர்வு ஏற்படும். அந்த நேரத்தில் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதன் மூலம் பசி உணர்வை தவிர்த்து நல்ல ஊட்டத்தை தரக்கூடிய மருந்தாக மாறுகிறது.


பிரசவ காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் உற்ற நண்பனாக இருக்கிறது . வளரும் சிசுவிற்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வரக்கூடிய பசி உணர்வை சரிசெய்து அவர்களுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.

செவ்வாழை பழத்தில் அதிக அளவு கால்சியம் சத்து அதிக அளவு காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சிசுவிற்கு அதிக கால்சியம் சத்து தேவைப்படும். அப்பொழுது தாயின் உடலின் எலும்புகளில் இருந்து போதுமான சத்துக்களை உறிஞ்சுகிறது, அந்த சத்துக்களை செவ்வாழை பழம் சாப்பிடுவதால் அதிக அளவு கிடைக்கிறது.

செவ்வாழை பழம் எடுத்துக்கொள்ளும்போது அது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலை அது தடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகைக்கு செவ்வாழை பழம் ஒரு தீர்வாக அமைகிறது. செவ்வாழை பழத்தில் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுவதால் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த சோகையை சரிசெய்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செவ்வாழை பழம் உதவுகிறது, செவ்வாழை பழத்தில் பொட்டாசியம் காணப்படுவதால் அவை இரத்தத்தில் சோடியம் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய சர்க்கரை பிரச்சினையை சரி செய்யும் அருமருந்தாக செவ்வாழை பழம் விளங்குகிறது.  முக்கியமாக குழந்தை பேறு இல்லாதவர்கள் செவ்வாழை பழத்தை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பை வலுப்பெற்று குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.