1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk plan not worked out becasue of vijay ajith meet

திமுக போட்ட திட்டம்லாம் பணாலாயிடுச்சே!.. ஸ்கோர் பண்ணிய அஜித் - விஜய்!...

vijay stalin
சமீபத்தில் சட்டசபையில் பேசிய விஜய் திமுகவினர் எதற்கெடுத்தாலும் நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்போது என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும் எனக்கூறி தாடையருகே கையை கொண்டு வந்து ஒரு ஆக்சன் செய்தார். அதாவது, ஸ்டாலினை போலீசார் அடித்ததில் அவரின் தாடை உடைந்துபோனதை அவர் நக்கலடித்ததாக திமுகவினர் புரிந்துகொண்டார்கள். எனவே, விஜயை அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அதேபோல், சட்டசபையில் அமைச்சர் சிடி நிர்மல்குமார் பேசியபோது ‘முக ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை. அது தொடர்பான அறிக்கைகளிலும் அவரின் பெயர் இல்லை. அப்போது, கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் தொடர்பான புகார்கள் என பலரும் கைது செய்யப்பட்டார்கள்’ என சொல்ல திமுகவினருக்கு கோபம் அதிகரித்தது.

எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திமுக எம்.பி மற்றும் சேகர் பாபு ஆகியோர் முதல்வர் விஜய் மற்றும் சிடி நிர்மல்குமாரை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார்கள். விஜய், அஜித் லண்டனில் சந்திக்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் விஜய்க்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்திருந்தது. குறிப்பாக விஜயை ஒருமையில் விமர்சிக்குமாறும் சொல்லப்பட்டிருந்ததாம்.

விஜய் - அஜித் சந்திப்பு தொடர்பான் செய்திகள் மக்களிடம் செல்லாமல் திமுகவின் ஆர்ப்பாட்டம் முன்னிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் சேகர்பாபு மற்றும் ஆர்.ராசா ஆகியோர் விஜயை மிகவும் தரக்குறைவாக பேசியதாக் சொல்லப்படுகிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி விஜயும், அஜித்தும் லண்டனில் சந்தித்துக்கொண்டதே மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறது. இதனால், திமுகவின் திட்டம் பணாலாகி விட்டதாக சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நான் Sorry சொல்றேன்.. ஆனா நீங்க திருந்துங்க!.. திமுக எம்.பி. ஆ.ராசா கோபம்!..