1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:53 IST)

விமானத்தில் பெண் ஊழியரிடம் தவறான நடந்து கொண்ட பயணிகளிடம் விசாரணை !

Flight
பெண் ஊழியரிடம் தவறான நடந்து கொண்ட பயணியிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில்  ஏர் இந்தியா விமானத்தில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற நபர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மிஸ்ராவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி விமானத்தில் மற்றொரு சம்பவம்  நடந்துள்ளது.

டெல்லியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஐதராபாத்திற்கு புறப்பட்டது. இதில் ஏறிய ஒரு ஆண் பயணி, விமான பெண் ஊழியரிடம்  தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், அங்குள்ள பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே, பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனவே, பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட பயணியையும் அவருடன் இருந்தவரையும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி இதுகுறித்து விசாரித்து  நடத்தி வருகின்றனர்.

 Edited By sinoj